படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

மார்ஸ் ரோவர் தன்னைத் தானே எடுத்த படம்!

செவ்வாய்கிரகம்: இங்கே நீங்கள் பார்ப்பது, செவ்வாயில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நாசாவின் மார்ஸ் ரோவர் தன்னைத்தானே முழுமையாக எடுத்து அனுப்பியுள்ள படம்.

செவ்வாய் கிரகத்தில் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வரும் மார்ஸ் ரோவர், தனது அடுத்த பயணத்தை விரைவில் ஆரம்பிக்கிறது.

அதற்கு முன் தனது மார்ஸ் ஹேண்ட் லென்ஸ் இமேஜர் மூலம் தன்னைத்தானே எடுத்துக் கொண்ட 55 படங்களை நாசாவுக்கு அனுப்பியிருந்தது.

இந்தப் படத்தால் என்ன லாபம் என்கிறீர்களா… செவ்வாயின் தட்பவெப்ப நிலை ரோவர் கலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறதா… தூசி அல்லது புழுதி படித்து அதன் சக்கரங்கள் பாதித்துள்ளனவா என்பதை அறிந்து உடனடியாக செயலில் இறங்க விஞ்ஞானிகளுக்கு இது உதவியாக இருக்கும்.

ரோவரின் இப்போதைய ஆய்வு செவ்வாயின் மண் தன்மை எப்படி இருக்கிறது? அங்கு மீத்தேன் வாயு அதிகமாக இருப்பதன் காரணம் போன்றவை குறித்துதான். அதுபற்றி அடுத்த கட்டுரையில்…

-ஸ்பேஸ்வாய்ஸ்
படம்: நாசா

Leave a Reply