படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

சூரியனை ஆராய ‘ஆதித்யா’… அடுத்த ஆண்டு ஏவப்படுகிறது!

asmசென்னை:  நிலவுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் சந்திரயான், மங்கள்யான் என விண்கலங்களைச் செலுத்தியுள்ள இஸ்ரோ, அடுத்த ஆண்டு சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா என்ற விண்கலனைச் செலுத்தத் திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டில் (2020) முதல் ஆறுமாதத்தில் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-வை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

இதுகுறித்து சிவன் கூறுகையில், “புவியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக சந்திரயான்-2 நிலை நிறுத்தப்பட்டது. சந்திரயான் 2 விண்கலம் சரியாக நிலவில் தரையிறங்கினால் அது யாருமே செய்யாத சாதனையாக இருக்கும்.

அடுத்த ஆண்டு முதல் 6 மாதத்தில் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். சந்திரன் தென் பகுதியில் நீர் மூலக்கூறுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

சந்திரயான் -2 திட்டம் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவேறினால், அடுத்ததாக சந்திரயான் -3 திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தும். நிலாவுக்கு சென்று, தரையிறங்கி, அங்குள்ள மண், பாறை மற்றும் தனிமங்களை சேகரித்து மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் மாபெரும் திட்டமே சந்திரயான் -3. இது மனிதர்களை நிலவுக்கு அனுப்பி திரும்ப அழைத்து வரும் திட்டத்துக்கு முன்னோடியாக அமையும்,” என்றார்.

Leave a Reply