படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

மனிதர்கள் வாழத் தகுதியுள்ள வேற்று கிரகங்கள் – பிரிட்டன் விஞ்ஞானி தகவல்

லண்டன்: மனிதர்கள் வாழத் தகுதியான ஏராளமான கிரகங்கள் சூரிய வெளிக்கு அப்பால் உள்ளன. இவை வரும் ஆண்டுகலில் கண்டுபிடிக்கப்படும் என பிரிட்டன் விஞ்ஞானி லார்டு மார்டின் ரீஸ் கூறியுள்ளார்.

இத்தகைய கிரகங்கள் அசாதாரண வெப்பம் அல்லது மிகக் குளிராக உள்ளதுதான் பிரச்சினையே.

இவற்றில் பல கிரகங்களின் மேற்பரப்பு உறைந்த நிலையிலும், திரவ நிலையிலும் காணப்படுகின்றன. கிரகங்களின் மேற்பரப்பில் உறைந்து கிடக்கும் தண்ணீர் அங்குள்ள நட்சத்திரங்களின் நேரடி வெப்பத்தின் மூலம் உறைந்து அங்கு நிலத்தடி நீராக வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதுகுறித்து இங்கிலாந்தில் உள்ள அபர்தீன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த பேராசிரியர் லார்டு மார்டின் ரீஸ் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

சூரிய குடும்பத்துக்கு அப்பால் உள்ள கிரகங்களின் நிலத்தடி நீரில், பூமியில் இருப்பதை போன்று நுண்ணுயிர் உயிரினங்கள் வாழும் வாய்ப்பு இருப்பதாக இந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரினங்கள் தண்ணீர் மூலம் தோன்றி பரிணாம வளர்ச்சி பெற்று மனிதனாக மாறியதாகத்தான் பூமியின் பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அப்படிப் பார்த்தால் தண்ணீர் இருக்கும் பல புதிய கிரகங்களில் அயல் கிரகவாசிகள் இருக்கும் வாய்ப்பு இப்போது முன்னிலும் அதிகமாகவே உள்ளது.

பூமியின் ஆராய்ச்சிக் கூடங்களுக்கு வேற்றுகிரகவாசி ஒருவர் திடீரென பிரசன்னமாகி ஹலோ சொல்லும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது!!

-ஸ்பேஸ் வாய்ஸ்

 

Leave a Reply