படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

ஒரு பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில்…

பூமியிலிருந்து ஒரு பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள இரு கேலக்ஸிகளை (விண்மீன் கூட்டம்) பிளாங்க் செயற்கைக் கோள் கண்டறிந்துள்ளது (ஒரு ஒளி ஆண்டு என்பது நான்கு ஆண்டுகளுக்கு இணையானது).

இந்த இரு கேலக்ஸிகளுக்கும் ஆபெல் என்று பெயரிட்டுள்ளனர். கீழுள்ள கேலக்ஸிக்கு ஆபெல் 399 என்றும், மேலிருக்கும் கேலக்ஸிக்கு ஆபெல் 401- என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த இரு கேலக்ஸிகளுக்கும் இடையே வாயுக்களால் ஆன ஒரு பாலம் போன்ற தோற்றம் காணப்படுகிறது.

நாசா மற்றும் ஐரோப்பிய விஞ்ஞானிகள் நமது அண்டவெளியில் இதுபோல 750 கேலக்ஸிகளைக் கண்டறிந்துள்ளனர். இன்னும் கண்டறியப்படாத கேலக்ஸிகள் எண்ணிக்கை லட்சம், கோடி கூட இருக்கலாம் என்கிறது வான் அறிவியல்.

ஒரு கேலக்ஸியில் பல மில்லியன் அல்லது ட்ரில்லியன் நட்டத்திரங்கள் உள்ளன. இவை பூமியை விட பல மடங்கு பெரிதாகவோ, சிறியதாகவோ உள்ளன!

-ஸ்பேஸ்வாய்ஸ்

Comments

  1. //(ஒரு ஒளி ஆண்டு என்பது நான்கு ஆண்டுகளுக்கு இணையானது).//

    ஒளி ஒரு ஆண்டில் பயணம் செய்யும் தூரம். தயவுசெய்து மாற்றவும்.

    மிகவும் வரவேற்கத்தக்க தளம். வாழ்த்துக்கள்

Leave a Reply