படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

செவ்வாய் கிரகத்தில் பூ வடிவ பொருள்.. பாம்பு வடிவ பாறை, பழைய நதி!

ind-Mars-Flower-400x267

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் பாறையின் மேல் முத்து நிறத்தில் பூ போன்ற வடிவமுள்ள படத்தை நாசாவின் க்யூரியாசிட்டி விண்கலம் பூமிக்கு அனுப்பியது. மேலும் பாம்பு வடிவ பாறை உருவாகியிருப்பதையும் படம் பிடித்து அனுப்பியுள்ளது ரோவர்.

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள நாசா க்யூரியாசிட்டி விண்கலத்தை அனுப்பியது. அது கடந்த மாதம் அனுப்பிய புகைப்படத்தில் பாறையின் மேல் முத்து நிறத்தில் பூ போன்ற வடிவம் ஒன்று உள்ளது. அது பூவைப் போன்று தெரிவதாக ஒரு தரப்பினர் கூற, அது பூ அல்ல என்றும், குவார்ட்ஸ் கல்லாக இருக்கலாம் என்று விண்வெளி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து நாசா அதிகாரப்பூர்வமாக எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை என்று செவ்வாய் கிரக ஆராய்ச்சி குழு தலைவர் அமிதாபா கோஷ் தெரிவித்துள்ளார்.

NLA_410546072EDR_F0051902NCAM00350M_-br

இதற்கிடையே, பாம்பு வடிவ பாறை உருவாக்கம், ஆறு போன்றவற்றையும் க்யூரியாசிட்டி ரோவர் படம் பிடித்தனுப்பியுள்ளது.

பழைய ஆறு ஓடியதற்கான தடங்கள் இதில் தெளிவாகத் தெரிகின்றன. இதன் மூலம் செவ்வாயில் நிலத்தடி நீர் இருக்கலாம்… உயிர் வாழும் சாத்தியம் அதிகம் என்ற நம்பிக்கை துளிர்த்துள்ளது.

Leave a Reply