படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

செவ்வாய் கிரகம்: அடுத்த சோதனைக்குத் தயாராகும் க்யூரியாசிட்டி!

செவ்வாய் கிரகத்தில் இறங்கியதிலிருந்து கடந்த 65 நாட்களாக தொடர்ந்து படங்களை எடுத்து அனுப்பி வருகிறது மார்ஸ் ரோவர் க்யூரியாசிட்டி.

கடந்த சில தினங்களுக்கு முன் முதல் முறையாக செவ்வாயின் மண் தன்மை பற்றிய ஆய்வில் ஈடுபட்டது க்யூரியாசிட்டி. அப்போது அந்த மண்ணில் ஒரு பளபளக்கும் புதிய பொருளை படம்பிடித்து அனுப்பியுள்ளது. அநேகமாக இது, க்யூரியாசிட்டியிலிருந்து உடைந்து விழுந்த பொருளாகக் கூட இருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.

இப்போது இரண்டாவது ஆய்வில் ஈடுபட்டுள்ளது. முதல் ஆய்வு முடிவில், செவ்வாயில் உயிரினங்கள் ஒரு காலத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் தெரியவந்துள்ளன.

க்யூரியாசிட்டி தற்போதுள்ள இடத்தை 360 டிகிரி கோணத்தில் படம்பிடித்து அனுப்பியுள்ளது.

அந்தப் படம்:

-ஸ்பேஸ்வாய்ஸ்

Leave a Reply