படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

லாஸ் ஏஞ்சல்ஸ் சாலைகளில் மக்கள் வெள்ளத்தில்… எண்டெவரின் கடைசி பயணம்!


ண்டெவர் விண்வெளி ஓடம் நேற்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் சாலைகளில் தனது கடைசி பயணத்தைத் தொடர, ஆயிரக்கணக்கான மக்கள் அதைப் பார்த்து ரசித்தனர்.

பூமியிலிருந்து சர்வதேச விண்வெளி மையத்துக்கு வீரர்களையும், பொருள்களையும் சுமந்து சென்று வந்த எண்டெவரின் பணிக்காலம் முடிந்ததால், அதற்கு ஓய்வளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு விமானத்தில் எண்டெவர் கொண்டு செல்லப்பட்டது. விமான நிலையத்திலிருந்து, நாசாவின் கலிபோர்னியா விஞ்ஞான மையத்துக்கு எண்டெவர் எடுத்துச் செல்லப்பட்டது.

இதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர சாலையோர மரங்கள் அகற்றப்பட்டன… விளக்குக் கம்பங்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டன. சாலை முனைகளில் இருந்த சில கட்டடங்களின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு என்டெவர் தடையின்றி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

எண்டெவர் கடைசி பயண சிறப்புப் படங்கள்:

Leave a Reply