படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

செவ்வாய்க்கு ஆளில்லாத விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் தீவிரமாகும் இஸ்ரோ!

டெல்லி:  அடுத்த 5 ஆண்டுகளுக்குள் செவ்வாய் கிரகத்துக்கு ஆளில்லாத விண்கலத்தை அனுப்புகிறது இந்தியாவின் இஸ்ரோ.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) அடுத்த 5 ஆண்டு காலத்தில் 58 விண்வெளி திட்டங்களை நிறைவேற்ற உள்ளது.

இவற்றின் மதிப்பு ரூ.39 ஆயிரத்து 750 கோடி.

மொத்தம் 58 திட்டங்கள் இஸ்ரோ வசம் உள்ளன. அவற்றில் முக்கியமானது சந்திரனுக்கு ஆளில்லாத ராக்கெட் அனுப்புவது.

அடுத்தது, செவ்வாய் கிரகத்தை ஆராயும் முயற்சியாக விண்கலத்தை அனுப்புவது.

ஏற்கெனவே இந்தியாவின் சந்திரயான் விண்கலம்தான், நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியத்தை கண்டுபிடித்தது நினைவிருக்கலாம்.

Leave a Reply