படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

செவ்வாயில் புழுதிப் புயல் – ‘மார்ஸ் ரிகனய்சன்ஸ் ஆர்பிட்டர்’ அனுப்பிய படம்!

பஸடேனா: செவ்வாய்க் கிரகத்தில் பெரும் புழுதிப் புயல் வீசியதை, நாசா முன்பு அனுப்பிய மார்ஸ் ரிகனய்சன்ஸ் ஆர்பிட்டர் விண்கலம் (Mars Reconnaissance Orbiter) படமெடுத்து அனுப்பியுள்ளது.

இந்தப் புயலில் செவ்வாயில் தரையிறங்கியுள்ள மார்ஸ் ரோவர் ஆப்பர்சூனிட்டி மற்றும் க்யூரியாசிட்டி விண்கலங்களும் சிக்கியிருப்பது தெளிவாகத் தெரிகிறது!

நாசா அனுப்பிய 5 விண்கலங்கள் இப்போது செவ்வாய் கிரகத்தில் உள்ளன.

அவற்றில் ரோவர் ஆப்பர்சூனிட்டி மற்றும் ரோவர் க்யூரியாசிட்டி ஆகிய இரண்டும், செவ்வாய் கிரக தரையில் இறங்கி படங்களை எடுத்து அனுப்பி வருகின்றன. பல்வேறு சோதனைகளையும் மேற்கொண்டுள்ளன.

இவை தவிர மூன்று செயற்கைக் கோள்கள் செவ்வாயின் எல்லைக்குள் இருந்தபடி, அந்த கிரகத்தின் மாற்றங்களை படமெடுத்து அனுப்பி வருகின்றன. அவை Mars Odyssey, Mars Express, மற்றும் Mars Reconnaissance Orbiter ஆகியனவாகும்.

இப்போது மார்ஸ் ரிகனய்சன்ஸ் ஆர்பிட்டர், செவ்வாய் கிரகத்தில் கடந்த நவம்பர் 18-ம் தேதி வீசிய புழுதிப் புயலை படமெடுத்து அனுப்பியுள்ளது.

செவ்வாயின் தெற்கு அரைக்கோளத்தில் வீசிய இந்த புழுதிப் புயலுக்கு மத்தியில், மார்ஸ் ரோவர் ஆப்பர்சூனிட்டியும், க்யூரியாசிட்டியும் உள்ளது அந்தப் படத்தில் தெரிகிறது. இரண்டு விண்கலங்களும் வெவ்வேறு பகுதியில் இயங்கி வருகின்றன.

Leave a Reply