படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

செவ்வாய் கிரகத்துக்கு மேலும் இரு ரோவர் விண்கலங்கள்

சான் பிரான்சிஸ்கோ:  செவ்வாய் கிரகத்துக்கு மேலும் ஒரு ரோவரை அனுப்புகிறது நாசா. இந்த விண்கலம் செவ்வாயில் உயிர்கள் வாழ்வது சாத்தியமா என்பதை ஆழமாக ஆராயப் போகிறது.

வரும் 2020 ஆண்டு இந்த விண்கலம் செலுத்தப்படும். அதற்கு முன்பே 2016-ல் இன்சைட் எனும் பெயரில் இன்னொரு ரோவரையும் அனுப்பவுள்ளது நாசா.

செவ்வாய் கிரகத்தில் ஏற்கெனவே நாசா அனுப்பிய 5 விண்கலங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. அவற்றில் ரோவர் ஆப்பர்சுனிட்டி மற்றும் ரோவர் க்யூரியாசிட்டி ஆகிய இரண்டும் செவ்வாயின் மேற்பரப்பில் இறங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. மற்ற மூன்று விண்கலங்கள் செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் நிலை கொண்டு, செவ்வாயில் ஏற்படும் மாறுதல்களைக் கவனித்து வருகின்றன.

கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி கியூரியாசிட்டி விண்கலத்தை செவ்வாய்க்கி அனுப்பியது நாசா.  வெற்றிகரமாக தரை இறங்கிய அந்த விண்கலம் அங்கு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

இந்தநிலையில் செவ்வாய் கிரகத்துக்கு மற்றொரு புதிய விண்கலத்தை அனுப்ப நாசா விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர். இந்த விண்கலத்துக்கு, தற்போது செவ்வாய் கிரகத்தில் உள்ள கியூரியா சிட்டி விண்கலத்திற்கு பயன்படுத்திய உதிரி பாகங்கள் மற்றும் என்ஜினீயரிங் தொழில்நட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.

குறிப்பாக கியூரியாசிட்டி விண்கலத்தின் அச்சு மற்றும் சேதமின்றி விண்கலம் இறக்க பயன்படுத்தப்பட்ட ஸ்கை கிரேன் ஏணி மற்றும் கியர் சிஸ்டம் போன்ற தொழில் நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த புதிய விண்கலம் வருகிற 2020-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படுகிறது. அது அங்கிருந்து மண் மற்றும் பாறை மாதிரிகளை வெட்டி சேகரித்து பூமிக்கு எடுத்து வரும்.

நாசா மையத்தின் பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக இந்த திட்டத்தில் ரஷியா உள்பட ஐரோப்பிய நாடுகளும் பங்குதாரர்களாக இணைகின்றன. இதற்கான திட்டம் வருகிற 2013-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி தொடங்குகிறது.

அதற்கு முன் 2016-ல் இன்சைட் எனும் ரோவரும் செவ்வாய்க்கு கிளம்பும். இத்துடன் சேர்த்து செவ்வாயை ஆய்வு செய்யும் பணியில் 7 ரோவர்கள் ஈடுபடும்.

2030-ல் மனிதனை செவ்வாய்க்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

நாசா இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

-ஸ்பேஸ்வாய்ஸ்

Leave a Reply