படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

சூரியனை ஆராய நாசா அனுப்பும் ஐரிஸ்!

safe_image
பசடோனா: சூரியனின் உட்பகுதி மற்றும் மேற்பரப்பை ஆராய நாசா ஆய்வு மையம் வரும் ஜூன் 26-ம் தேதி ஐரிஸ் (Interface Region Imaging Spectrograph – IRIS) என்ற புதிய செயற்கைக் கோளை அனுப்புகிறது.

இதுவரை சூரியனைப் பற்றி நாம் அறியாத பல விவரங்களை இந்த புதிய செயற்கைக் கோள் தரும் என்று நம்பப்படுகிறது.

சூரியனின் மேற்பரப்பில் நடனமிடும் பல மில்லியன் டிகிரி வெப்பத் தழல்கள், சூரியனின் கீழ்ப் பகுதியின் தன்மை, நடுப்பகுதியின் ரகசியங்கள் போன்றவற்றை அறிய மகா ஆர்வத்துடனிருக்கும் விஞ்ஞானிகளுக்கு ஐரிஸ் தரும் தகவல்கள் பெரும் உதவியாக இருக்கும்.

கலிபோர்னியாவின் வாண்டர்பெர்க் விமானப் படை தளத்திலிருந்து இந்த சிறு செயற்கைக் கோள் ஏவப்படுகிறது.
iris-1
-ஸ்பேஸ்வாய்ஸ்

Leave a Reply