படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

செவ்வாயில் வேறு யாரும வசிக்கிறார்களா? கண்டுபிடிக்க இதோ நாசாவின் புதிய டெக்னிக்!

tissint1

செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள் வாழ்வு பற்றி உறுதியாக அறிந்துக்கொள்ள உதவும் வகையில் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளதாம் நாசா அமைப்பு.

பூமியில் வாழும் நமக்கு, வேறு கிரகங்களில் மனிதர்கள் போன்று உயிரினங்கள் இருக்கலாம் அல்லது இருந்திருக்கலாம் என்ற விஷயம் எப்போதுமே சுவாரசியமானது தான்.

முக்கியமாக செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்திருக்கலாம் என்பதற்காக ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமும், ஐரோப்பிய விண்வெளிக் கழகமும் இணைந்து செவ்வாய்க்கு அனுப்பிய ஆளில்லா விண்வெளி ஓடங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்திருந்தால், கிடைக்கக்கூடிய படிமங்களை ஆய்வு செய்ய நாசா புதிய தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இந்த புதிய கருவியைக் கொண்டு படிமங்களின் முக்கூறுகள் மீது லேசர் கதிர்கள் செலுத்தப்படும். அப்போது ஏற்படும் அதிர்வெண்களை கொண்டு அங்கு வாழ்ந்த உயிரினங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள முடியும் என தெரியவந்துள்ளது.

-ஸ்பேஸ்வாய்ஸ்

Leave a Reply