படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

முட்டை வடிவில் ஒரு நிலா!

கோள்களாகட்டும், அவற்றின் துணைக் கோள்களாகட்டும்.. நாமறிந்த அவற்றின் பொதுவான வடிவம் வட்டம்தான்.

ஆனால் முட்டை வடிவிலும் துணைக்கோள்கள் உள்ளன. தட்டை, நீள்வட்டம் என பல்வேறு வடிவ நிலாக்கள், துணைக் கிரகங்கள் இந்த அண்டத்தில் உள்ளன.

இங்கே படத்தில் நீங்கள் பார்ப்பது சனிக்கிரகத்தின் துணைக் கோள்களில் ஒன்றான மிதோன்.

சனிக்கிரகத்தை ஆராயும் நாசாவின் காஸினி விண்கலம்  எடுத்த படம் இது. மிகச் சிறிய துணைக்கோளான (நிலா) இந்த மிதோனுக்கு ஈர்ப்பு சக்தி கிட்டத்தட்ட இல்லை. அதனால் தன்னைத் தானே உருண்டை வடிவத்துக்கு கொண்டு வரமுடியாமல், இப்படி முட்டை வடிவத்துக்கு மாறிவிட்டனவாம்.

2500 மைல் தூரத்திலிருந்து காசினி இந்தப் படத்தை எடுத்துள்ளது.

சனிக்கிரகத்துக்கு ஏகப்பட்ட துணைக் கிரகங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி அடுத்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

-ஸ்பேஸ்வாய்ஸ்

Leave a Reply