படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல்: 1500 கிமீ நீள ஆறு கண்டுபிடிப்பு!

upperreullvallis_perspective1

லண்டன்: செவ்வாய்கிரகத்தில் 1500 கிமீ நீளமும் 7 கிமீ அகலமும் 300 மீட்டர் ஆழமும் கொண்ட பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆறு ஒன்றைக் கண்டுபிடித்து படமெடுத்து அனுப்பியுள்ளது மார்ஸ் எக்ஸ்பிரஸ்.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா… மனிதர்கள் வாழ்வது சாத்தியமா.. அதற்கான கனிமக் கூறுகள் செவ்வாயில் உள்ளனவா.. போன்றவற்றைக் கண்டறிய நாசா, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி உள்பட பல அமைப்புகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன.

இதில் ஏற்கெனவே மார்ஸ் ரோவர் க்யூரியாசிட்டி செவ்வாயின் மேற்பகுதியை ஆய்வு செய்து பல ஆயிரம் புகைப்படங்களை எடுத்தனுப்பி வருகிறது. கற்கள் நிறைந்த ஆற்றுப் படுகைகள், ஈரம் மிக்க மணல் பரப்பு போன்றவற்றை படமெடுத்து அனுப்பி வருகிறது.

ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி அனுப்பிய இன்னொரு விண்கலம்தான் மார்ஸ் எக்ஸ்பிரஸ்.

இந்த விண்கலம் இப்போது அனுப்பியுள்ள படம் செவ்வாய்க்கிரக ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

செவ்வாயில் பல மில்லியன் ஆண்டுகள் பழமை மிக்க ஆற்றின் துணை ஆறு ஒன்றை அதன் ஈரமிக்க மணல் படுகையுடன் படம் பிடித்துள்ளது மார்ஸ் எக்ஸ்பிரஸ். செவ்வாயின் ரியூல் வேல்லி என்ற பகுதியில் இந்த ஆறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் அகலம் 7 கிமீகளாகவும், நீளம் 1500 கிமீ ஆகவும் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் ஆழம் 300 மீட்டராகும்.

3.5 லிருந்து 1.8 பில்லியன் ஆண்டுகளுக்கிடையில் இந்த ஆறு ஏராளமான தண்ணீருடன் ஓடியிருக்கும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். படத்தில் காணப்படும் மணல் மலைகள் 2500 மீட்டர் உயரம் கொண்டவை. வட்ட வடிவில் தெரிபவை மணல் பள்ளத்தாக்குகள்.upperreullvallis_perspective2-940

இதன் மூலம் செவ்வாய் கிரகம், முன்னொரு காலத்தில் பூமியைப் போலவே நீர் நிறைந்த கிரகமாக இருந்திருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால் இப்போது தண்ணீர் ஐஸ் வடிவில் உறைந்து கிடைப்பதையும் இந்தப் படங்கள் உறுதிப்படுத்துகின்றன.

-ஸ்பேஸ்வாய்ஸ்

 

Comments

  1. ஆர்வமமூட்டும் செய்தி! நன்றி!

Leave a Reply