படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

புதிய சாதனை படைத்து பூமிக்குத் திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!

நாசா: இந்திய வம்சாவழியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 4 மாத ஆய்வுக்கு பிறகு இன்று பூமிக்கு திரும்பினார்.

அமெரிக்க வாழ் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்(47). நாசா விஞ்ஞானியான அவர் முதன்முறையாக கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி விண்வெளிக்கு சென்றார். அங்குள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி பணியாற்றிய அவர் 2007ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் தேதி பூமி திரும்பினார்.

சுனிதா கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி, ரஷ்யாவின் யூரி மாலென்சென்கோ மற்றும் ஜப்பானின் அகி ஹோஷிடே ஆகியோருடன் கஜகஸ்தானில் இருந்து விண்வெளிக்கு சென்றார். இது சுனிதாவின் 2வது விண்வெளிப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 6ம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் சுனிதா விண்வெளியில் இருந்தே வாக்களித்தார்.

சுனிதாவை வரவேற்கும் அதிகாரிகள்…

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் தலைமை பொறுப்பை ஏற்று பணியாற்றினார் சுனிதா. இந்நிலையில் பூமிக்கு திரும்பும் முன்பு தலைமை பொறுப்பை அங்குள்ள நாசா விஞ்ஞானி கெவின் போர்டிடம் கடந்த சனிக்கிழமை ஒப்படைத்தார்.

சுனிதா மற்றும் அவருடன் சென்ற 2 விஞ்ஞானிகள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 127 நாட்கள் தங்கிய பிறகு இன்று காலை பூமியை வந்தடைந்தனர்.

 

Leave a Reply