படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

நிலவில் அணுகுண்டு வைத்து தகர்த்தால் சோவியத் ஆடிப்போயிடுமே! – அமெரிக்காவின் பகீர் திட்டம்!!

வாஷிங்டன்: 1950களில் நிலவை அணு குண்டு வைத்து தகர்க்க அமெரிக்கா திட்டமிட்டிருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

1950களில் நிலவை அணு குண்டு வைத்து தகர்க்க ‘புராஜெக்ட் ஏ119′ என்ற திட்டத்தை அமெரிக்கா தீட்டியது. ஆனால் அத்திட்டத்தை அது செயல்படுத்தவில்லை.

இது குறித்து தி டெய்லி மெயில் வெளியிட்டுள்ள செய்தியில், “சோவியத் யூனியன் விண்வெளிக்கு ஸ்புட்னிக் விண்கலத்தை அனுப்பிய பிறகு பூமியில் இருந்து நிலவு வெடிப்பதைப் பார்த்தால் அது சோவியத் யூனியனுக்கு ஒரு பேரதிச்சியாகவும், அமெரிக்காவின் நம்பிக்கையை அதிகரிப்பதாகவும் இருக்கும்.

பெயர் வெளியிடப்படாத இடத்தில் இருந்து சிறிய அணு குண்டை நிலவுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. ஹைட்ரஜன் குண்டை விண்கலத்தில் அனுப்பினால் அது மிகவும் கனமாக இருக்கும் என்பதால் அணு குண்டை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. 238,000 மைல் கடந்து நிலவின் ஒரு பகுதியில் இந்த அணுகுண்டை வெடிக்க வைக்கத் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் இந்த திட்டம் தோல்வி அடைந்தால் பூமியில் உள்ள மக்களுக்கு ஏற்படும் விபரீதங்களை கருத்தில் கொண்டு ராணுவ அதிகாரிகள் இம்முயற்சியைக் கைவிட்டனர்,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோவியத் யூனியன் ஸ்புட்னிக்கை அனுப்பியதால் ஆத்திரமடைந்தே இந்தத் திட்டத்தைத் தீட்டியது அமெரிக்கா மேலும் சோவியத் யூனியனை விட தானே வலிமையானவன் என்பதை நிரூபிக்கவும் இந்த திட்டத்தை தீட்டியது அமெரிக்கா.

Leave a Reply